மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியினர் தங்களுக்குள் புகழ் மாலை சூட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் இது அனைத்தும் சாதாரணம்தான் என்றாலும் பிரதமர் மோடியை புகழ்வதில் அதிமுகவினர் ஒருபடி மேலே சென்றுகொண்டிருக்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் தெரிவித்து வருகின்றனர்.
மோடி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்: தொடரும் ராஜேந்திர பாலாஜி பொன்மொழிகள்! - அதிமுக
விருதுநகர்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டைக் காக்கும் ஸ்டண்ட் மாஸ்டர், மல்யுத்த வீரர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பிரதமர் மோடி நாட்டைக் காக்கும் ஸ்டண்ட் மாஸ்டர், மல்யுத்த வீரர்" என்றார்.
ஆம், மோடி ஸ்டண்ட் மாஸ்டர்தான் ஆனால் நாட்டைக் காக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் இல்லை. புல்வாமா விவகாரத்தை வைத்தும், மிஷன் ஷக்தி என்ற செயற்கை கோள் விவகாரத்தை வைத்தும் தேர்தல் நேரத்தில் பொலிட்டிக்கல் ஸ்டண்ட் அடிக்கும் மாஸ்டர் என எதிர்க்கட்சியினர், சமூக வலைதளவாசிகள் உட்பட பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Last Updated : Mar 28, 2019, 11:40 AM IST