விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரையின்போது கூறியதாவது, தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 24 மாவட்டங்களுக்கும் தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கன்னு விவசாயிகளை இழிவுபடுத்தி வருகிறார். கஷ்டப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி கொண்டுதான் வருகிறது.
'மக்களவைத் தேர்தலோடு மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும்' - ராஜேந்திர பாலாஜி ஆரூடம்! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: "மக்களவைத் தேர்தலோடு மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும்" என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நிர்வாகிகள் இல்லாத கமலின் மக்கள் நீதி மையம் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும். எங்கள் கூட்டணி கட்சியான பாஜகவின் வெற்றிக்காக அதிமுக பாடுபடும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் பரப்புரைக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, என்றார்.