விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்களித்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மக்களிடையே அதிமுக அலை வீசுவதால் தமிழ்நாடு அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆர்வத்தோடு மக்கள் வாக்களித்துவருகின்றனர்.
ஸ்டாலினுக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - தேர்தல் வாக்குப்பதிவு
விருதுநகர்: அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என வாக்களித்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. டிடிவி தினகரன் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க கூட்டத்தை உருவாக்கியுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சும், நடைமுறையும் வெறித்தனமாக இருந்தது. நடைபெறும் அனைத்து மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்பார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும்" என்றார்.