விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அல்லம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். துணை முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் மது போதையில் இருந்த தொண்டர் ஒருவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வாழ்க என கூறிக்கொன்டு ஓ.பி.எஸ் அருகே நெருங்கினார். அப்போது, அங்கிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டரைப் பார்த்து ஆவேசமடைந்து கூட்டத்தின் நடுவே கத்தினார். இதனால் திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
ஓ.பி.எஸ் முன் ராஜேந்திர பாலாஜி ஆவேசம் - பரப்புரை கூட்டத்தில் சலசலப்பு! - virudunagar
விருதுநகர்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுப்பட்டபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டரை பார்த்து ஆத்திரமடைந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ராஜேந்திர பாலாஜி
அதைத்தொடர்ந்து அங்கு இருந்த காவல்துறையினர், அவரை அங்கிருந்து அப்புறபடுத்த முயன்றனர். இதை அடுத்து அவர் கூச்சலிடவே, இடையில் தலையிட்ட துனை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அவரை ஒரமாக உட்காருங்கள், நான் பேசிமுடித்துவிட்டு உங்களை சந்திக்கிறேன் எனக் கூறி சமாதனப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.