அக்னி நட்சத்திரம் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. பகல், இரவு என அதிகாலை வரை மக்கள் வெப்ப சலனத்தில் தவித்தனர். இந்நிலையில் விருதுநகர் மற்றும் விருதுநகரை சுற்றியுள்ள சூலக்கரை , பெரியவள்ளிகுளம், ஆர்.ஆர் நகர் போன்ற பகுதிகளில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் சில இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி ! - பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் : கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் விருதுநகர், தேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சில இடங்களில் மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் விருதுநகரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார். அதேபோல், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, பெரியகுளம், வடுகபட்டி, என்டப்புளி, காமாட்சிபுரம், சோத்துப்பாறை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணிநேரம மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.