நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
சொன்ன நேரத்திற்கு வராத ராதிகா... காலி இருக்கைகள் மத்தியில் உரை - Radhika Sarathkumar campaigning in Virudhunagar
விருதுநகர்: பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த ராதிகா சரத்குமார் காலி இருக்கைகள் மத்தியில் உரையாடி விட்டு அவசர அவசரமாகக் கிளம்பி சென்றார்.
அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
விருதுநகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற இருந்த பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு அவர் 9:55 மணிக்கு தான் வருகை தந்தார். இதனால் வெகு நேரமாகக் காத்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டத்திலிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அவசர அவசரமாக வந்த ராதிகா சரத்குமார் ஐந்து நிமிடம் உரையாற்றி விட்டு அதே அவசரத்துடன் கிளம்பி சென்றதால் அங்கு எஞ்சியிருந்த தொண்டர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.