விருதுநகர் மாவட்டம் பாவாலி அருகேவுள்ள சீனியாபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கல்குவாரி ஒன்றும் செயல்பட்டுவருகிறது. இந்த கல்குவாரியில் சுமார் 80 அடி ஆழம்வரை கல் எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு விதியை மீறி செயல்பட்டும் கல்குவாரியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: பாவாலி பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே செயல்படும் கல்குவாரியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அரசு விதிகளின்படி குடியிருப்பு பகுதிகளிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு மேல் கல்குவாரி அமைக்கப்பட வேண்டும். ஆனால் அரசு விதியை மீறி இந்த கல் குவாரி செயல்பட்டுவருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பலத்த சத்தத்துடன் கூடிய வெடி பொருள்களை பயன்படுத்துவதால், குடியிருப்புகள் பாதிப்படைகிறது.
இதனால் அரசு விதியை மீறி செயல்பட்டுவரும் இந்த கல் குவாரியை உடனடியாக அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.