விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள குருலிங்காபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்து சேறும் சகதியுமாக உள்ளன.
இந்தச் சாலைகளை சரி செய்யக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைகளில் கட்டு போட்டுக் கொண்டு ஆர்பாட்டத்திலும், நாற்று நடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சாத்தூரிலிருந்து அண்ணாநகர், குருலிங்காபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பிரதான சாலை மற்றும் தெருச்சாலைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக நீர் தேங்கிய நிலையில் சேறு சகதியுடன் காணப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் வாகனத்தில் பயணிக்கையில் பள்ளமான இடங்களை கடக்கும்போது விபத்து ஏற்படும் என அச்சத்தில் இருக்கின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் பழுதடைந்த சாலைகளை விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் உடனே சரிசெய்யக் கோரியும், மோசமாக உள்ள சாலைகளை சரி செய்யத் தவறிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சேறு நிரம்பிய சாலையில் இறங்கி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரிசல் காட்டில் ஆரஞ்சு விளைவித்து சாதனைப் படைத்த விவசாயத் தம்பதி!