விருதுநகர்: பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை திடீரென 7 நாட்களில் ( 15 கிலோ) ரூ.184 வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நல்லெண்ணெய் டின் ஒன்றுக்கு ரூ.4538 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தவாரம் திடீரென விலை உயர்ந்து ரூ.4702 க்கு விற்கப்படுகிறது.
விருதுநகரில் பிரபலபமான எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் நல்லெண்ணெய் விலையை தீர்மானிப்பதில் இந்த நிறுவனங்களே முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.