விருதுநகர்: சாத்தூர் போலீசாருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் படந்தால் விலக்கு அருகே சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரி நிறுத்தாமல் வேகமாக சென்றதால், போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். வேகமாகச் சென்ற லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு, டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னால் விரட்டிச்சென்ற போலீசார் லாரியை கைப்பற்றி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சோதனை செய்ததில், அதில் சுமார் 400 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் எடை சுமார் 20 டன் உள்ளதாக தெரியவந்தது.