தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றணும்’ அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

விருதுநகர்: புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பணி நியமன ஆணை விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.
பணி நியமன ஆணை விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

By

Published : May 21, 2021, 8:12 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக ஐந்து மருத்துவர்கள், 110 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது அவர், “நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. நாடு என்பதை விட, நாம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். அதனால் ஒவ்வொரும் அவரவர் பாதுகாப்பை பொறுத்துதான், நோய் தொற்று இல்லாமல் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பணி நியமன ஆணை விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

கரோனாவை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அலுவலர்கள் உறுதுணையாக உள்ளனர். ஏற்கனவே கரோனா தடுப்பு பணிக்காக 33 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது கூடுதலாக ஐந்து மருத்துவர்கள், 110 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க அரசு தயாராக உள்ளது. இக்கட்டான இந்தக் காலகட்டத்தை கருத்தில் கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் அர்பணிப்போடு பணியாற்ற வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : ’மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம்’ - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details