அந்த மனுவில்,”கடந்த 100 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வாங்கிய கடன்களுக்கு அதிக வட்டி வசூலிப்பது மற்றும் உடனடியாக கடனை கட்ட சொல்லி நிர்பந்தப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அரசு சார்பில் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இருவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மனு! - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில், இருவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும் பல்வேறு பகுதிகளில் சுய உதவிக் குழு கடன், தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிதி நிறுவனங்கள் அரசு உத்தரவை மீறி பொதுமக்களிடம் கடன்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்பந்தப்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் கோணபந்தல் கிராமத்தில் புங்கன்குளம் கண்மாய் உள்ளது. இதனருகே முறையான அனுமதி இல்லாமல் கல்குவாரி ஒன்று செயல்படுகிறது. அதன் மூலம் நிலத்தடி நீர் குறைந்து குளத்தில் தண்ணீர் இல்லாமல், விவசாயிகளுக்கு மிகுந்த சிரமமான சூழல் ஏற்படுகிறது. எனவே முறையான அனுமதியின்றி செயல்படும் கல்குவாரியில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.