தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பெருமாள் கோயில் பூஜை - virudhunagar temple function

விருதுநகர்: பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோயில் பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Temple function
Temple function

By

Published : Jan 9, 2020, 7:12 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சுமார் 500 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பெருமை வாய்ந்த வெங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதில், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். பூஜையின்போது பக்திப் பரவசத்துடன் பொதுமக்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

சாத்தூரப்பன் என்றழைக்கப்படும் வெங்கடாசலபதி சப்பரத்தில் திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பெருமாள் கோயில் பூஜை

இதையும் படிங்க: கடனை திருப்பிக் கொடுத்த லைகா - 'தர்பார்' வெளியீட்டில் பிரச்னை இல்லை

ABOUT THE AUTHOR

...view details