தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் அருகே மது அருந்தாதே என்றவர் உயிரழப்பு! - virudhu nagar

விருதுநகர்: சாத்துார் அருகே வீட்டின் அருகே மது அருந்துவதைக் கண்டித்தவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பி ஓடியுள்ளார்.

murder case
murder case

By

Published : Sep 18, 2020, 3:45 PM IST

Updated : Sep 18, 2020, 3:54 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்துவருபவர் சிவக்குமார் (47). இவர் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்திவருகிறார். அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர் சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து இரவு வேளையில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை சிவக்குமார் அடிக்கடி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (செப்.17) இரவு வீட்டின் அருகே மது அருந்த அமர்ந்த மாரிமுத்துவை சிவக்குமார் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துவந்து சிவக்குமாரை பின்புறமாக சரமாரியாக வெட்டினார்.

சிவக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததையடுத்து மாரிமுத்து தப்பி ஓடிவிட்டார்.சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உயிரிழந்தார்.

இது குறித்து சிவக்குமாரின் உறவினர்கள் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் வெட்டுப்பட்டு உயிரிழந்த சிவக்குமார் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மாரிமுத்து மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

.

Last Updated : Sep 18, 2020, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details