ஊரடங்கை தொடர்ந்து விருதுநகரில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் விதமாக புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை, மின்வாரிய அலுவலகம், மற்றும் நகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் காய்கறி விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இந்தத் தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை விருதுநகர் நகராட்சி ஆனணயர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காய்கறி விற்பனை செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.