ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57ஆவது குரு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எம்.புதுப்பட்டி கிராமத்திலிருந்து எட்டு பேர் சொகுசுக் காரில் சென்றனர்.
கார் ஓட்டுநரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அபிஷேக், காரை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கத்தாளம்பட்டி கிராமம் அருகே சென்றபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
குருபூஜைக்கு சென்ற கார் விபத்து இதில், தறிகெட்டு ஓடிய கார், சாலையை ஒட்டியிருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேட்டுப்பட்டியைச்சேர்ந்த பாண்டி, காளீஸ்வரன் புதுப்பட்டியைச்சேர்ந்த வனராஜா பொன்னுப்பாண்டி, கண்ணன், கருப்பசாமி மற்றும் சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அருண் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த எட்டுபேரும் தற்போது அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து எம்.ரெட்டியபட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :நவம்பர் 1 தமிழ் வளர்ச்சி நாள் - கம்யூனிஸ்ட் கட்சி!