விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜா என்பவர், அதே பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றும் ராமசுப்புவை தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டுவது, சாதி ரீதியாக தரைக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.
அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்! - ஊராட்சி செயலாளரை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி
விருதுநகர்: அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் பணியை புறக்கணித்து கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காவல்துறையினர் அவதூறாகப் பேசிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல், ஊராட்சி செயலாளரை கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து ஒரு சமூகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பின்பு வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள், அரசு ஊழியர்கள், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகியைக் கண்டித்தும், ஒருதலைபட்சமாக செயல்படும் காவல் துறையைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
TAGGED:
அதிமுக நிர்வாகி