துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலான பேச்சியம்மன் கோவிலில் ரவீந்திரநாத் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் - தேனி அதிமுக வேட்பாளர்
விருதுநகர்: புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி மக்களவைத் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார். தங்களுக்கு எதிராக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நிற்பது குறித்த கேள்விக்கு, யார் வேட்பாளராக நின்றாலும் தனக்கு கவலையில்லை என்றும், பிரச்சார யுக்திகளும், மக்களும் பதில் சொல்வார்கள் என தெரிவித்தார்.