விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ”நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை கடந்த ஆட்சியில் யார் நல்ல ஆட்சி தந்தார்கள் என்று பார்த்தும், மக்கள் பிரச்னையை தீர்ப்பவர்கள் யார் என்பது குறித்தும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிமுக கட்சி ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்டது. அதிமுகவை பூகம்பம் சுனாமியால்கூட அசைக்க முடியாது. 2030ஆம் ஆண்டுக்குள் வீடில்லா அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்படும்.