விருதுநகர் அருகே ஓ. கோவில்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான ஏஞ்சல் பட்டாசு ஆலை உள்ளது. 17 அறைகள் கொண்ட இந்தப் பட்டாசு ஆலை அனுமதி பெற்று செயல்பட்டுவருகிறது. இங்கு 25 பட்டாசு தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.
பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு - Explosion at the fireworks factory
விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
பட்டாசு ஆலையில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!
இந்நிலையில் பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாண்டுரங்கன் என்பவரின் மகன் மல்லீஸ்வரன் (40) உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஒரு அறை முழுவதும் சேதமானது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
Last Updated : Jun 3, 2020, 4:12 PM IST