விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பகருல் அலி என்ற இளைஞர் கடந்த ஒரு மாதமாகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அஸ்ஸாம் மாநிலத்திலேயே கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பகருல் அலி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த இளைஞன் இந்தத் தகவலை அவரது தந்தையிடம் தெரிவித்துவிட்டு, சிறிது நேரத்திலேயே தான் தங்கி இருந்த அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.