விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அதன்பின் பிணையில் வெளியே வந்த அவர், அருப்புக்கோட்டையில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு வியாழக்கிழமைதோறும் செல்வதாக, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
பள்ளிவாசலில் நிர்மலாதேவி தியானம்: குண்டுக்கட்டாக வெளியேற்றம் - Police
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் பேராசிரியை நிர்மலாதேவி தியானம் செய்ததால், அவரை காவல்துறையினர் வலுகட்டாயாமாக வெளியேற்றினர்.
இதனிடையே, நேற்று (திங்கட்கிழமை) இரவு மதுரை சாலையில் உள்ள பள்ளிவாசலுக்க சென்ற நிர்மலாதேவி, அங்கு தரையில் அமர்ந்து தியானம் செய்தார். இத்தகவல் பரவியவுடன் பொதுமக்கள் வேடிக்கை பார்க்க துவங்கி விட்டனர். இதனை அறிந்த மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பேராசிரியை நிர்மலாதேவியை எழுந்து போக கூறினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, வலுகட்டாயாமாக காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இதனை காண பொது மக்கள் பெருந்திரளாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.