தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு - விருதுநகர் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பரளச்சி ராணி சேதுபுரத்தில் மக்காச் சோளக்காட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சத்யபாமா
சத்யபாமா

By

Published : Dec 13, 2019, 6:04 PM IST


அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி ராணிசேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி சத்தியபாமா. கனகராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களின் ஒரே மகனும் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். அண்மையில்தான் மகன் வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வந்தார். நேற்று உறவினர் இல்லத் திருமண விழாவிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சத்தியபாமா சந்தேகத்திற்கிடமான வகையில் கொல்லப்பட்டுள்ளார். விவசாயம் செய்துவந்த சத்தியபாமா தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்திற்குச் சென்று பணிகளைக் கவனித்துவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்தச் சூழலில் நேற்று ஊரின் வடக்குப் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாயக் காட்டில் பாசிப்பயறு பறிக்கச் சென்ற சத்தியபாமா நள்ளிரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் காட்டுப்பகுதியில் சத்தியபாமாவைத் தேடினர். வெளியூர் சென்றிருந்த மகனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்தவுடன் ஊர் மக்களுடன் சென்று பரளச்சி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். மகன், ஊர்மக்கள், காவல் துறையினர் சேர்ந்து மோப்பநாய் உதவியுடன் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் சத்தியபாமாவைத் தேடினர். இரவு முழுவதும் தேடிக் கிடைக்காத சத்தியபாமா இன்று காலை மக்காச் சோளக்காட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மேலும் சத்தியபாமாவை கொலை செய்த நபர்கள் அவரது உடல் மீது சோளக்கதிர்களை வைத்து மறைத்து விட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரளச்சி காவல் துறையினர், சத்தியபாமா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details