விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் கோயிலில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோன்று அங்கு சுற்றித்திரியும் குரங்குகளும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் பக்தர்கள் அமாவாசை பூஜைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்கு மலை ஏறிய பக்தர் ஒருவர், தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்தார். இதனை வாங்கி ஒவ்வொரு குரங்குகளும் தாகத்தை தீர்த்துக் கொண்டன.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்!
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குரங்குகள் தண்ணீரின்றி தவிக்கும் சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள்
இதே நிலை பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த அளவிற்கு சதுரகிரியில் வறட்சி நிலவுவதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை அறநிலையத்துறை செய்து தரவேண்டும். அதேபோன்று, வனவிலங்குகளுக்கும் குடிக்க தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.