விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில், பால்வளத் துறை அமைச்சரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இவரை ஆதரித்து அதிமுகவினர், பொதுமக்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
“நான் வேட்பாளராக உள்ளது இறைவன் இட்ட கட்டளை”-கே.டி.ராஜேந்திர பாலாஜி! இந்நிலையில் பரப்புரையின்போது அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “சிவகாசியில் நான் மூன்று முறை சேர்மனாகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றி உள்ளேன். தற்போது இராஜபாளையம் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக இன்று வேட்பாளராக இப்பகுதியில் நிற்கிறேன். இது இறைவன் இட்ட கட்டளை.
நான் அமைச்சராக இருந்தபோதே முக்கூடல் குடிநீர் திட்டம், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மேலும் இப்பகுதியில் சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் கிராமப்புறத்தில் புதிய சாலை அமைத்தல் என பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.
மேலும் வரும் காலங்களில் சேத்தூர் பேரூராட்சி பகுதியினை நகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இராஜபாளையம் தொகுதி வேட்பாளர்களாகிய என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் ஒரே பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா!