தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு! - விருதுநகர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் : மாவட்ட விளையாட்டு அரங்கில் தீயணைப்புத் துறையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

rajendra balaji

By

Published : Nov 14, 2019, 11:57 PM IST

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர்.

இவற்றை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் பார்வையிட்டார். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் தாங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டனர்.

வீடுகளில் ஏற்படும் கேஸ் விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை வெள்ள காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல்முறை விளக்கங்களை அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்புத் துறை ஊழியர்கள் செய்து காட்டி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.

பாதுகாப்பு ஒத்திரிகையை பார்வையிடும் அமைச்சர் ரஜோந்திர பாலாஜி


இதையும் வாசிங்க : உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு ஊழல் அம்பல
ம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details