ராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலமைச்சரையும், ஜெயலலிதாவையும் திமுக தலைமை சொல்லியே ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளார். திமுக வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது இன்று நேற்றல்ல. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினும் வன்முறையை முழுமையாக நம்புகிறார்.
இந்திரா காந்தியையே மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கட்சிதான் திமுக. அண்ணாவின் மறைவிற்கு பின்பு திமுக எடுத்த பாதையே வன்முறை பாதைதான். திமுக வரும் தேர்தலில் படுதோல்வி அடையும். அதன் எடுத்துக்காட்டுதான் ராஜபாளையத்தில் நடந்த வன்முறை. திமுகவின் அராஜக போக்கை பார்க்கும் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் பதில் அளிப்பார்கள்.