தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியோர் பென்ஷன் தொகைக்கு நடவடிக்கை - ராஜேந்திர பாலாஜி உறுதி

முதியோர் பென்ஷன் தொகை குறித்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்த நிலையில், அதற்காக தனியாக ஆட்கள் நியமித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுயளித்தார்.

minister rajendra balaji election campaign
அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி தேர்தல் பரப்புரை

By

Published : Mar 29, 2021, 9:34 AM IST

விருதுநகர்: ராஜபாளையம் கிராமப் பகுதிகளில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதியோர் பென்ஷன் ரூ. 2000ஆக வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். தொகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் இவர், கிராமப் பகுதிகளில் ஊர் தலைவர் மற்றும் பொது மக்களை சந்தித்தும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

ராஜபாளையம் அருகே தேவதானம் மேல மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. அங்கு சென்று சாமி தரிசனம் செய்து பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இதைத்தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட மற்ற கிராம பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு கிராமத்திலும் பெண்கள் ஆரத்தி எடுத்து பூ போட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

தேவதானம் மேல மாரியம்மன் கோயிலில் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம்

தேவதானம், முத்துச்சாமிபுரம், சுந்தரநாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தபோது பெண்கள், உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் ராஜபாளையத்தில் பேசும்போது தற்போது வழங்கப்பட்டுவரும் முதியோர் தொகையான ரூ. 1000, இனி ரூ. 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். நெசவாளர்களுக்கு தேவையான நூல் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது, கூட்டத்தில் இருந்த வயதான பெண் ஒருவர் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பினார். இதற்கு அவர் சிரித்துக்கொண்டே சமாளித்து பதிலளித்தார். அந்த மூதாட்டி இனிமேல் எங்கள் வாக்கு உங்களுக்குதான் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அந்த மூதாட்டி, எங்கள் பகுதிக்கு பல பிரச்னைகள் உள்ளன என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். இதற்கு, அடுத்த தேர்தலில் உன்னை கவுன்சிலர் ஆக்கி விடுகிறேன் என அந்த மூதாட்டியிடம் அமைச்சர் நகைச்சுவையாக கூறினார்.

கிராம மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து பேசிய ராஜேந்திர பாலாஜி, முதியோர் பென்ஷன் பற்றி அதிகமானோர் கேட்டுள்ளீர்கள்.எனவே அதற்கு தனியாக நான் ஆட்களை நியமித்து உங்களது மனுக்களை வாங்க முகாம் ஏற்பாடு செய்கிறேன். வாங்கப்படும் மனுக்களை உடனடியாக ஆன்லைனில் ஏற்றி, உங்களுக்கு முதியோர் பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: 'இதற்காகவாவது நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்' - முதலமைச்சரை வாழ்த்திய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details