ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்று ஆண்டாள்புரம் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி அங்கு மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நீங்கள் அய்யனார் கோவில் குளத் தண்ணீரைத் தான் குடித்து வருகிறீர்கள். இனி தாமிரபரணி நீரை குடிப்பதற்கு வழி வகுத்து கொடுப்பேன். எனக்கு விவசாய நிலங்கள் இந்த பகுதியில் இருப்பதால், வாரத்தில் இரண்டு நாள் வந்து செல்கிறேன். அதனால் இங்கேயே உங்களுக்காக பணியாற்றுவேன்.
இனி ராஜபாளையம் அல்ல; நான் நாளும் ராஜ ஆலயம்! - ராஜபாளையம்
விருதுநகர்: தனக்கு விவசாய நிலங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதால், வாரத்தில் இரண்டு நாள் இங்கேயே உங்களுக்காக தங்கி பணியாற்றுவேன் என அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ktr
இனிமேல் இது ராஜபாளையம் அல்ல; நான் ஆளும் ராஜ ஆலயம். நான் கோயில்களுக்கு அதிகமாக செல்வேன். இமயமலை வரை சென்று வந்து விட்டேன். இந்த ஊர் அதிகமான கோயில் உள்ள ஊர். எனவே, எனக்கு வாக்களித்து 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: பல்பு மாட்றான், லைட்ட காணோம், ரோடு போடுறான், ரோட்டை காணோம் : துரைமுருகன் கிண்டல்