விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், "நேற்று சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்தது வருத்தப்படக்கூடிய நிகழ்வு. விதிகளை மீறி பேனர் வைப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
பேனர் விவகாரம்... அதிமுகவினரின் ஆர்வக் கோளாரால் அரசுக்கு கெட்ட பெயர்: அமைச்சர் - விருதுநகர் மாவட்டம் சாத்தூர்
விருதுநகர்:அதிமுக நிர்வாகிகளின் பேனா் வைக்கும் ஆர்வக் கோளாரால் அரசுக்குதான் கெட்ட பெயர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஒரு சில அதிமுக நிர்வாகிகளின் பேனா் வைக்கும் ஆர்வக் கோளாரால் அரசுக்குதான் கெட்ட பெயர் ஏற்படுகிறது’ என்றார்.
மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசுவதற்கான தகுதி கிடையாது . காங்கிரஸ் கட்சி இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளி விட்டது. தமிழ்நாட்டில் நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம். விஜய் கட்சி தொடங்குவது குறித்து எனக்கு தெரியாது. ரஜினி,அஜீத் போன்ற நல்ல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அதை ஆதரிப்போம்" என்றார்.