விருதுநகர்:கோட்டூரில் புதிய பேருந்து வழித்தடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று(அக்.15) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயர் தான். பொது மக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போது கூட உள்ளாட்சித் தேர்தலில் திமுக 50 முதல் 60 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.