தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆண்களே அப்படித்தான், உள்ளே இறங்கினால் வேற மாதிரி"- சொல்கிறார் அமைச்சர்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் வெளியில் இருந்தால் ஒரு மாதிரி.. ஏதாவது உள்ளே இறங்கினால் அது ஒரு மாதிரி - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு
ஆண்கள் வெளியில் இருந்தால் ஒரு மாதிரி.. ஏதாவது உள்ளே இறங்கினால் அது ஒரு மாதிரி - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு

By

Published : May 21, 2022, 1:16 PM IST

Updated : May 21, 2022, 2:36 PM IST

விருதுநகர்:திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (மே21) விருதுநகரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறது. யாரும் யாரையும் மிரட்டி பார்க்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு இன்று கடுமையாக உள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு

நாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரவு பகல் பாராமல் வேலை பார்க்கிறார். அதன் காரணமாக, நாம் நிம்மதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இன்னும் இருபது ஆண்டுகாலம் திமுக ஆட்சிதான். அதற்கு பின்பும் திமுக ஆட்சிதான். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்தும் பணியில் முதலமைச்சராக ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

பேருந்து முதல் நியாயவிலைக் கடைகள் வரை தாய்மார்களுக்கு முதலிடம் தருகிறார். இதற்கு காரணம் தாய்மார்கள் முறையாக வாக்களிக்கிறார்கள். ஆண்கள் வெளியில் இருந்தால் ஒரு மாதிரியாக வாக்களிப்பார்கள்; வேறு மாதிரி உள்ளே ஏதாவது இறங்கினால் வேறு மாதிரி வாக்களிப்பார்கள். இது முதலமைச்சருக்குத் தெரியும்.

தாய்மார்கள் சொன்ன சொல் தவறாமல் வாக்களிப்பார்கள். இதன் காரணமாக பெண்கள் சிறப்பான எதிர்காலம் பெறவேண்டும். அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் செயல்படுகிறார்” என பேசினார்.

இதையும் படிங்க:மன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது அப்பா - ராகுல் காந்தி ட்வீட்

Last Updated : May 21, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details