தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசியில் மாரத்தான் போட்டி: உற்சாகமாக கலந்துகொண்ட மாணவிகள் - உற்சாகமாக கலந்துகொண்ட மாணவ மாணவிகள்

விருதுநகர்: மகளிர் தினத்தையொட்டி சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

marathan
marathan

By

Published : Mar 8, 2020, 11:07 PM IST

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதும் இந்த நாளை பெண்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். படித்து சமூக அறிவு கொண்ட பெண்கள் ஒரு சிலர் சமூகத்தில் செய்து வரும் முயற்சிகள் பலரையும் வியக்க வைக்கிறது. இன்றைய சூழலில் பெண்களும் ஆண்களுக்கு நிகராய் தன்னால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

பெண்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குவது பெருமகிழ்ச்சியடைகிறது. பெண்கள் சிறகுகளை விரிக்கத் தயாராகி விட்டனர், பருந்துகளை பார்த்து பயந்த காலம் மலையேறிவிட்டது என்றே கூறலாம்.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சிவகாசி தனியார் பெண்கள் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர், 3 கிலோமீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளாக நடை பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் உடலை வலிமையடைய வைப்பதோடு பெண்களின் சம உரிமை மற்றும் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக உள்ளது.

இதையும் படிங்க:'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details