விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் மகள் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " ஓபிசி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இதை எதிர்த்து மாநில அரசும், மத்திய அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் அதிமுகவை பிஜேபியுடன் இணைத்து விடுவார். அதற்கான வேலையைதான் தற்போது பார்த்து வருகிறார். ராஜேந்திர பாலாஜியை பொறுத்தளவில் பிஜேபியின் ஒரு ஆளாகத்தான் இருக்கிறார். அவர்தான் மோடியை முதலில் "டாடி" என்று அழைத்தவர்.