தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைச்சர் விஜயபாஸ்கர் கைக்கூலியாக காவல் துறை செயல்படுகிறது' - மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு! - எம்பி ஜோதிமணி குறித்து பேசிய மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: ஜோதிமணி மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதின் மூலம் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கைக்கூலியாக காவல் துறை செயல்படுவது தெளிவாக தெரிகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர்
செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர்

By

Published : Feb 21, 2021, 10:02 AM IST

விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்டம், நகர, பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், “ காந்தி சிலையை அகற்றியதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்பி ஜோதிமணி மீது காவல் துறை நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஜோதிமணி மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பின்னால் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கைக்கூலியாக காவல் துறை செயல்படுவது தெளிவாக தெரிகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர்

புதுச்சேரி, உத்தராகண்ட் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மக்களால் பாஜக புறக்கணிக்கப்பட்ட நிலையில் மற்ற கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை பயமுறுத்தியும், பதவி ஆசையை காட்டியும் பாஜக ஆட்சி அமைக்கிறது. அதேபோல்தான் புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒத்துழைப்புடன் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்று வருவதாக ஐயம் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் தமிழ்நாட்டினுடைய அரசியலிலே மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க: 'நியாயம் தர்மம் எல்லாம் இல்ல... கேள்வி கேட்டா இதுதான் நெலம!' - வேதனையில் குமுறும் ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details