விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர். நகா் பகுதியில் துலுக்கப்பட்டி ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து புனலூர் வரை நிலக்கரி ஏற்றிச்செல்லும் சரக்கு ரயிலானது சிக்கலுக்காக துலுக்கப்பட்டி ரயில் நிலையம் அருகில் நின்றுள்ளது. இதனால், அப்பகுதியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது.
அப்போது, ரயில்வே கேட்டை தாண்ட முயன்ற அப்பகுதி மக்கள் ரயில் மீது ஏறி கடந்துள்ளனர். அவர்களைப் போல், அடையாளம் தெரியாக நபர் ஒருவர், ரயிலின் கூரை மீது ஏறியபோது ரயில் புறப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், உடனடியாக ரயிலிலிருந்து குதிக்க முயன்றார்.
அப்போது, மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் ரயில் அதே பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் மதுரை, நெல்லை மார்க்கத்தில் செல்லும் அனைத்தும் ரயில்களுக்கு சமிக்ஞை (சிக்னல்) கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டதில் சுமார் 1 மணி நேரத்திற்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தண்டவாளத்தைக் கடக்க ரயில் மீது ஏறிய நபர் இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு!