தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டி? - நடிகை கெளதமி

ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகிவருகின்றன.

Lotus symbols were painted in Rajapalayam constituency on the orders of the BJP  - Actress Gautami
பாஜக மேலிடத்தின் உத்தரவின்படி ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னங்கள் வரையப்பட்டன - நடிகை கெளதமி

By

Published : Mar 1, 2021, 7:03 AM IST

விருதுநகர் : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கௌதமி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தொகுதி பங்கீடு செய்யப்படாத நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் தாமரை சின்னம் வரையப்பட்டிருப்பதும் அங்கு கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக மேலிடத்தின் உத்தரவின்படி ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னங்கள் வரையப்பட்டன - நடிகை கெளதமி

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை கெளதமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி பொறுப்பாளராக மட்டுமே பணியாற்றி வருகிறேன். தற்போது வரையில் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யவில்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைமையகத்தின் அறிவுறுத்தலின் பேரில்தான் ராஜபாளையம் தொகுதியில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொகுதி முழுவதும் பாஜக மேலிடத்தின் உத்தரவின்படி தான் தாமரை சின்னங்கள் வரையப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் அதிமுக, அதன் கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவரும் சூழலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்டு செயல்பட்டு ராஜபாளையம் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமில்லாமல், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details