தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் பிரச்னை - செவிலியர் தற்கொலை - செவிலியர் தற்கொலை

விருதுநகர்: சாத்தூர் அருகே காதல் பிரச்னையின் காரணமாக மனமுடைந்த முனீஸ்வரி என்ற செவிலியர்,  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

செவிலியர் தற்கொலை

By

Published : Aug 18, 2019, 11:34 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னஓடைபட்டியைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகள் முனீஸ்வரி(23). இவர், சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக காதல் பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டார்.

காதல் பிரச்னை-செவிலியர் தற்கொலை

இந்நிலையில், சாத்தூர் அருகேயுள்ள சின்னஓடைப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த கிராமத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் சாத்தூர் தாலுகா காவல்துறையினர் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details