விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்ட திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”காமராஜர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது நீட் என்ற தேர்வை கொண்டு வந்து பல உயிர்பலிகள் நடந்துள்ளன. கலைஞர் ஆட்சியில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள ம௫த்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் படிக்கும் சூழல் உருவாகியுள்ளது, இதில் ஆள் மாறாட்டம் வேறு நடைபெறுகிறது. நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவருக்கு எந்த மதமோ, ஜாதியோ, இனமோ இல்லை, அவருக்கு சாயம் பூசி மதம் பிடிக்க வைக்கக்கூடாது. ஐஐடி தற்போது ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவருகிறது என குற்றஞ்சாட்டினார்.