தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது' - கி. வீரமணி குற்றச்சாட்டு!

விருதுநகர்: குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது, அதன் முன்னோட்டம் தான் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ki-veeramani

By

Published : Nov 17, 2019, 9:51 AM IST

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அதன் பொன்விழா தொடக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இந்த தொடக்க விழா மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பொன் விழா தொடக்க மாநாட்டில் பேசிய கி வீரமணி, ' திராவிடர் கழகத்தினர் லஞ்சம் வாங்கிக்கொண்டோ ஊழல் செய்துவிட்டோ சிறைக்குச் செல்லவில்லை. மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலைக்கு சென்றவர்கள் நாங்கள்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ' குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை திட்டம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தல் முறை ஏலம் போல நடைபெற்று வருகிறது' என விமர்சனம் செய்தார்.

'நீட் தேர்வை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூற வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு என்பது பெருகிக் கொண்டேதான் செல்கிறது. ஊழலை ஒழிக்க நீட்தேர்வு கொண்டு வந்தோம் என்றனர். நீட் தேர்வு ஊழலை ஒழித்து உள்ளதா?' என வீரமணி கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியபோது...

'தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏது? கட்டடம் தான் உள்ளது. வெற்றிடம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் 35 தடவை நாட்டு நலனுக்காக சிறை சென்றவர்களா? நன்றாகப் பாடுவர்களை ரசிக்க முடியும். அதற்காக அவர்களைப் பிரதமராக்க முடியுமா?' என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவரும் ஐஐடி’ - கி.வீரமணி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details