விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகரைச் சேர்ந்த ராமலட்சுமி செவிலியாக பணிபுரிந்துவருகிறார். அவரின் மகள்கள் இருவரும் மதுரையில் தங்கிப் படித்துவருவதால் வீட்டில் தனியாக வசித்துவருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பூட்டியிருந்த வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை - virudhunagar latest news
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
virudhunagar
அதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மூதாட்டியிடம் நகையை பறித்த இருவர் கைது