தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீசல் விலை உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள் வாகனப் பேரணி! - diesel price hike

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே டீசல் விலை உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள் வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள் வாகனப் பேரணி  ஜேசிபி உரிமையாளர்கள் வாகனப் பேரணி  டீசல் விலை உயர்வு  JCB owners rally to condemn diesel price hike in aruppukottai  diesel price hike  JCP Owners Vehicle Rally
JCB owners rally to condemn diesel price hike in aruppukottai

By

Published : Mar 3, 2021, 10:25 AM IST

நாட்டில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள், தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள காரியாபட்டியில் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தங்களது ஜேசிபியுடன் அடையாள வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஜேசிபி உரிமையாளர்கள் கூறுகையில், "கடந்த சில வருடங்களாக ஒரு மணி நேரத்திற்கு 800 ரூபாய் ஜேசிபி வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாயாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது" என்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனப்பேரணி - தலைக்கவசம் இல்லாமல் கலந்துகொண்ட பாஜகவினர்

ABOUT THE AUTHOR

...view details