விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் வீரசூரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தபட்டது. இப்போட்டியில் வீரசூரன் கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் விருதுநகர், மதுரை, சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். தற்காலிக மருத்துவ முகாம், மருத்துவ குழு, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் திமிறிய காளைகள்!
விருதுநகர்: கோவில் திருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு
மாடுகளும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே களமிறக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா, வெள்ளி காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர்.