விருதுநகரில் அதிமுக கட்சியின் மக்களவைத் தேர்தல் அலுவலகத்தைப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார்.
மோடி கார்ப்ரேட் கைக்கூலியா? - ராஜேந்திர பாலாஜி விளக்கம் - கார்ப்ரேட்
விருதுநகர்: தொழிற்சாலைகள் வந்தால் சாதி மத, இன போதமின்றி மக்கள் ஒன்றிணைந்து பணிபுரிவார்கள் எனப் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து கடவுள்களை திமுக, திக கட்சிகள் அவதூறாகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனவே அவர்கள் இந்துக்களின் விரோதி என்றும் கடுமையாகச் சாடினார். மேலும், தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு வரும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும், குண்டர்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்த அவர் தினகரன் அணியினர் அதிமுக கரை வேஷ்டி கட்டாமல் இருக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஆணியையும் பிடுங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினைப் போல் அவரது மகனும் அவதூறாகப் பேசிவருகிறார் என விமர்சித்தார்.