விருதுநகர்:சிவகாசியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உள்ளரங்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கூவத்தூரில் ஆரமித்த கூத்து தற்போது தமிழ்நாடு முழுவதும் கூவம் ஆகிவிட்டது. நான் சிறுவயதில் இருந்தபோது கூவத்தை சுத்தம் செய்வேன் என கூறிய அரசியல்வாதிகள் யாரும் கூவத்தை சுத்தம் செய்யவில்லை. இவர்கள், எப்படி தமிழ்நாட்டை சுத்தம் செய்யவார்கள்.
எங்களுக்கு தன்மானம் உண்டு. என்றும் விட்டுக்கொடுக்கமாட்டோம். மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும். எத்தனை தடைகள் வந்தாலும் மீறி செல்வோம். நாங்கள் பின்வாங்கமாட்டோம். எம்ஜிஆர் எங்கள் சொத்து, மக்கள் திலகம் என்பது திமுகவும் அதிமுகவும் கொடுத்ததில்லை; மக்கள் கொடுத்தது. லஞ்சம் வாங்காமல் ஆட்சியாளர்கள் செய்த ஒரே வேலை மக்கள் நீதி மய்யத்தை விளம்பரப்படுத்தியது.