விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் உள்ளது கொட்டமடக்கிப்பட்டி கிராமம். இங்கு மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அக்கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பதுக்கல்: ஒருவர் கைது - One arrested for hoarding liquor
விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
One arrested for hoarding liquor
அப்போது மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 634 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, பெரியசாமி (38) என்பவரைக் கைது செய்தனர். தற்போது இது குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நடத்தையில் சந்தேகம்: கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!