தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள்!' - செங்கோட்டையன் உறுதி - govt school students speaks english

விருதுநகர்: "அரசு பள்ளி மாணவர்கள் எளிமையாக ஆங்கிலத்தில் பேச பிரத்தியேகமாக புதிய திட்டம் விரைவில் வரவுள்ளது" என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Jul 14, 2019, 8:36 PM IST

காமராஜரின் 117வது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் தனியார் பள்ளியில் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய செங்கோட்டையன், "அரசு பள்ளியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் கணினி மயமாக்கப்படும். 6 முதல் 8ஆம் வகுப்புகள் வரை ஸ்மார்ட் கிளாஸ், இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும். அரசு பள்ளி மாணவர்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் சராளமாக பேச பிரத்யேகமாக 2000 ஆங்கில வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மென்பொருள் மூலம் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

அதனை மாணவர்கள் படித்து பயன்பெறலாம். இத்திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசமுடியும். இதன் மூலம் தமிழ் மாணவர்கள் வேலை தேடி பிற மாநிலங்கள், நாடுகள் செல்லும்போது, இப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details