விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். விஜயகரிசல்குளம் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கும் பாண்டி கண்மாய் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் குடிமராமரத்துப் பணிகள் மூலம் புனரமைக்கப்பட்டது.
அதனை சிறப்பிக்கும் விதமாக அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 12 ஆயிரம் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கண்மாயின் இருபக்களிலும் பனை விதைகளை நடவு செய்தனர்.