விருதுநகரில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி! - Human chain
விருதுநகர்: சட்டப்பேரவைத் தேர்தலில் 100% சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்தினர்.
விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்த வேண்டும், நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
இதைப் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் 100 மாணவிகள், வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.
இந்தப் பேரணியில், மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் தலைமையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையைச் சுற்றி பேரணியாக சென்று மனிதச்சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.
மேலும் பேரணியில் 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பது ஜனநாயக கடமை போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.