விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்டநேரி கண்மாய், கடம்பன் குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய், என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
இராஜபாளையம் தென்காசி சாலை பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் இயங்கி வந்த நெல் சேமிப்பு கிடங்கு மூடப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடத்தை அலுவலர்கள் தேர்வு செய்யாமல் அலட்சியம் காண்பித்து வந்துள்ளனர்.